களத்தில் அதிரடி காட்டும் திருச்சி மாவட்ட ஆட்சியர்

களத்தில் அதிரடி காட்டும் திருச்சி மாவட்ட ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோரையாறு மற்றும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தவித்து வருகின்றனர்.

இது மட்டுமில்லாமல் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் அனைத்தும் முழுவதும் நிரம்பி வருவதாக மாவட்ட ஆட்சிய தெரிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மற்றும் மழைநீரால் பாதிப்பு ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று (08.11.2021) குழுமாயி அம்மன் கோயில் உள்ள கதவணையிலிருந்து தண்ணீர் அதிக அளவு வெளியேற்றப்படுகிறது.

மேலும் மாவட்டத்தில் மழை நீர் தேங்காமல் பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பதற்காக முக்கொம்பு கொள்ளிடம் பழைய மதகுகள் வழியாக 10 ஆயிரம் கனஅடி நீர் நேற்று திறக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று (09.11.2021) கொட்டும் மழையிலும் எடமலைப்பட்டி புதூரர் கோரையாற்றில் மழைநீர் வரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதே போன்று ஏர்போர்ட் பகுதியிலுள்ள ஜே.கே.நகர் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தேங்கியுள்ள நீரினை அகற்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision