திருச்சியின் மற்றுமொரு அடையாளம் - சர்.சி.வி ராமன் பெயரில் பிரம்மாண்ட அறிவியல் பூங்கா

திருச்சியின் மற்றுமொரு அடையாளம் - சர்.சி.வி ராமன் பெயரில் பிரம்மாண்ட அறிவியல் பூங்கா

திருச்சியில் முதல் முறையாக ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் பிரமாண்டமான முறையில் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணித பூங்கா (STEM PARK) ரூபாய் 14 கோடியே 90 லட்சம் செலவில் உருவாகிறது. மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள 6 ஏக்கர் நிலப்பரப்பில் 3.66 ஏக்கரில் இருந்த பூங்கா வடிவமைக்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற திருச்சியை சேர்ந்த டாக்டர் சர் சி வி ராமன் பெயரில் உருவாக்கப்படும் இந்த அறிவியல் பூங்காவில் பள்ளி மாணவ மாணவிகள் அறிவியலின் அடிப்படை தத்துவத்தை புரிந்து கொள்ளும் வகையிலும் கணிதம் தொழில்நுட்பம் பொறியியல் குறித்த பாடங்கள் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையிலும் அறிவியல் உபகரணங்கள் வைக்கப்பட உள்ளது.


கல்வி சார்ந்த அமைக்கப்படும் இந்த பூங்காவில் சிறிய அரங்கம் நூறு பேர் அமரக்கூடிய மினி திரையரங்கம், பூங்கா நுழைவு வாயிலில் உணவகம் என பல்வேறு அம்சங்களுடன் இந்த பூங்கா கட்டமைக்கப்படுகிறது. திருச்சி மாநகர மக்கள் மாலை நேரங்களில் காவிரி பாலத்தில் குழந்தைகளுடன் வந்து அமர்ந்து பொழுது போக்குகிறார்கள். இதனால் குழந்தைகளின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையிலும் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

கொரோனா காலத்தில் கட்டுமான பணிகள் சிறிது தொய்வடைந்த நிலையில் தற்போது துரிதமாக  பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா பொதுமக்களுக்கான சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இதே நிலையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரையில் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision