திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீத விபரம்

மார்ச் ஏப்ரல்-ல் நடைபெற்ற 2024-2025 கல்வி ஆண்டிற்கான இடைநிலைப் பொதுத்தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியானது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 445 பள்ளிகள் பயின்ற 16,973 மாணவர்களும், 16,572 மாணவிகளும் மொத்தமாக 33,545 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 16,123 மாணவர்களும் 16,286 மாணவிகளும் மொத்தமாக 32,409 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
94.99% மாணவர்களும் 96.27% மாணவிகளும் மொத்தமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் மொத்தமாக 96.61% மாணவிகளும்,மாணவர்களும்,தேர்ச்சி பெற்றுள்ளனர்.தரவரிசையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.மாவட்ட அளவில் கடந்த ஆண்டை விட 1.38% தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.
மாநில தேர்ச்சி சதவீதம் 93.80 ஆக உள்ளது. தமிழில் மொத்தமாக 99.19 சதவீதமும், ஆங்கிலத்தில் 98.80 சதவீதமும், கணிதத்தில் 98.13 சதவீதமும் அறிவியலில் 98.99 சதவீதமும் சமூக அறிவியலில் 98.97% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision