மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக தேசிய விளையாட்டு தின விழா

மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக தேசிய விளையாட்டு தின விழா

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் உள்ள விளையாட்டு வீரர்களிடையே விழா நடைபெற்றது. விழாவில் மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் தலைமையில், மாநில அளவில் பதக்கம் வென்ற சிலம்பாட்ட வீராங்கனை  ஜீ.சகானா ஸ்ரீ மற்றும் தேசிய அளவில் தட களத்தில்  ஜீனியர் பிரிவில் 4 x 100 தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்ற திருச்சி மேலகல்கண்டார் கோட்டை சேர்ந்த  கோல்டன் தடகள சங்க ஸ்ரீவித்யா மற்றும் தடகளப் பயிற்சியாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. வாலிபால் விளையாட்டு வீரர் ரயில்வே சாமிநாதன் பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது.

விளையாட்டு என்பது வெறும் விளையாட்டல்ல தனி மனிதன் உடல்நலம், மனநலம் குடும்ப நலம், சமூக நலம், தேச நலம் ஆகியவை உள்ளடக்கியது. பெற்றோர்கள் விளையாட்டுத் துறையில் தங்கள் பிள்ளைகளை ஈடுபட  ஊக்கப்படுத்தினால் பல பதக்கங்களை நாம் வெல்ல முடியும். நம் பிள்ளைகளுக்கு விளையாட்டுத் துறையில் கால்பதித்து முன்னேற பெற்றோர்களும் சமூகமும் துணையாக இருக்க வேண்டும் என்றும் ஹாக்கி வீரர் தியான்சந்த் பிறந்த நாளை விளையாட்டு தினமாக இந்தியா முழுதும் கொண்டாடி வருகிறோம். தியான்சந்த் போலவே விளையாட்டுத் துறையில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் நாட்டிற்கு உலகளவில் பெருமை சேர்த்திட வேண்டும் என்று கி.சதீஷ்குமார் கருத்துரை வழங்கினார்.

தேசிய விளையாட்டு தின பாராட்டு விழாவில் திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் பொருளாளர் ரவிசங்கர் , கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் சுதாமணி, கோல்டன் தடகள சங்க பயிற்சியாளர் கனகராஜ், சாமி தற்காப்புக்குமு பயிற்சியாளர் டி.ஜீவானந்தம், தண்ணீர் அமைப்பு நிர்வாகி ஆர்.கே.ராஜா, லோகநாதன் , பிரிட்டோ, டீசல் ரஜினி , மற்றும் தடகள, வாலிபால், சிலம்பாட்ட வீரர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn