அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு!

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்திடும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 2739 சக்கர நாற்காலிகள் மற்றும் உதவியாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் உள்ள சக்கர நாற்காலிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கு தடையின்றி வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சாய்வுதள வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வரிசை, பார்வையற்றவர்கள் தேர்தலில் போட்டியிடும் வேப்பாளர்கள் பற்றிய விபரப்பட்டியலை எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் பிரெய்லி முறையில் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் நாளன்று வாக்களிக்க வாகன வசதி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் தேர்தல் அவசர உதவி எண் 1950-ற்கு வரும் 04.04.2021 தேதிக்குள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் மேற்காணும் வசதிகளைப் பயன்படுத்தி 100 சதவீதம் வாக்களித்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81