திருச்சி விமான நிலைய விரிவாக்கம் 15 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவு

திருச்சி விமான நிலைய   விரிவாக்கம் 15 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவு

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திருச்சி விமான நிலைய பணியை தொடங்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தமிழக அரசின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.

 திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக 166.9 ஏக்கர் ராணுவ நிலத்தை பயன்படுத்த மாநில அரசு அனுமதி அளித்திருக்கிறது. பாதுகாப்பு அமைச்சகத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், 457 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த AAI-க்கு அனுமதி கிடைத்துள்ளது.

 திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக 166.9 ஏக்கர் ராணுவ நிலத்தை பயன்படுத்த இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. சுமார் 15 வருடங்களுக்கு பிறகு, விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்காக 457 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கப் பணியை இந்த வருடமே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளமும் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கப்படும் பட்சத்தில் உள்ளூர் பொருளாதாரம், ஏற்றுமதி முதற்கொண்டு பல்வேறு நன்மைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தற்போது இருக்கும் ஓடுதளம் சிறியதாக இருப்பதால் பெரிய ரக விமானங்கள், கார்கோ விமானங்கள் போன்றவை இயக்கப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. ஓடுதளம் விரிவாக்கும்போது அனைத்து ரக விமானங்களும் இங்கு இயக்கப்படும்

இந்தியாவின் முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக திருச்சி சர்வதேச விமான நிலையம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision