14 வருடமாக துணியால் மூடப்பட்டிருந்த சிவாஜி சிலைக்கு விடிவு

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் வசித்து வந்த நடிகர் சிவாஜி கணேசன் நாடக நடிகராக உருவெடுக்க காரணமான ஊராக அமைந்தது திருச்சி. பத்ம விபூஷன், செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற நடிகர் சிவாஜி கணேசனுக்கு நாடக நடிகராக முதன்முதலில் உருவாக காரணமான
திருச்சியில் அவரது ரசிகர்கள் சார்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் 9 அடி உயரமுடைய முழு திருவருவ வெங்கல சிலை வைக்கப்பட்டது. ஆனால் அந்த சிலை திறக்கப்படாமல் கடந்த 14 வருடங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த சிலையை அப்பகுதியில் திறக்க வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த சிலை
போக்குவரத்து இடையூறு காரணமாக அந்த பகுதியில் இருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டு வேறு இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற மே ஒன்பதாம் தேதி திருச்சி வரும் தமிழக முதல்வர் வேறு இடத்தில் வைக்கப்படும் சிவாஜி சிலையை திறக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்று பாலக்கரை பகுதியில் உள்ள சிவாஜி சிலையானது தற்பொழுது அகற்றப்பட்டு வருகிறது14 வருடமாக மூடப்பட்டு திறக்காமல் இருந்த சிவாஜி சிலையை அகற்றுவதால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.
சிவாஜியின் முழு உருவ சிலையை சோனா மீனா திரையரங்கு எதிரே உள்ள மாநகராட்சி இடத்தில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision