தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி

மக்களின் கையில் இருக்கும் மிகப்பெரும் ஆயுதம் தான் தகவல் அறியும் சட்டம் .அரசின் சில துறைகளை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலிருந்தும் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கு உதவும் மிகப்பெரிய சட்டம் தகவல் உரிமை சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (RTI சட்டம்) என்பது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் தங்கள் தகவல்களைப் பெற உதவும் ஒரு சட்டமாகும். இந்த சட்டம் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை மேம்படுத்துவதே அதன் நோக்கம்.
மக்களின் வரிப்பணம் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பது அறிந்து கொள்வதற்கு இந்த தகவல் அறியும் சட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
ஒவ்வொரு அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்களை கண்டறிவதற்கும் இந்த சட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி தகவல்கள் கேட்க விரும்பபவர்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு வெள்ளைத் தாளின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
அனுப்புநர் விவரங்கள் சரியாக இருத்தல் அவசியம் பெறுநரில் எந்த அலுவலகத்தின் தகவல்களை பெற விரும்புகிறோமே அந்த அலுவலகத்தின் முகவரியை தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்
அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்குக் கொடுக்க வேண்டும். குறிப்பாகத் தகவல்களைப் பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை ஆகும்.
தகவல் அறியும் சட்டத்தை பற்றி இந்தியர்களாகிய ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision