கொரோனா காரணமாக 8 மாத இடைவெளிக்குப் பிறகு ஒரு தொடர் விடுமுறை - விழாக்களை கொண்டாடி மன மகிழ்ச்சியுடன் சிறப்பித்து விட்டு சொந்த ஊர் திரும்பும் பயணிகளால் நிரம்பி வழியும் ஜங்சன் பேருந்து நிலையம்!

கொரோனா காரணமாக 8 மாத இடைவெளிக்குப் பிறகு ஒரு தொடர் விடுமுறை - விழாக்களை கொண்டாடி  மன மகிழ்ச்சியுடன் சிறப்பித்து விட்டு சொந்த ஊர் திரும்பும் பயணிகளால் நிரம்பி வழியும் ஜங்சன் பேருந்து நிலையம்!

கொரோனா தமிழகத்தையே உலுக்கியதன் காரணமாக தொழிலாளர்களும் பொதுமக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த நிலையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியதன் காரணமாக பொதுமக்கள் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

Advertisement

ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி ,எதற்கும் அரசு அனுமதி வழங்காத நிலையில் பஸ் போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டது.இதனையடுத்து தொழிலாளர்கள் பலரும் வேலை நிமித்தமாக தாங்கள் பணிபுரியும் ஊருக்கு சென்று பணியாற்றி வந்தனர்.இந்த சூழலில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை நாளாக இருந்தது. 

Advertisement

இதன் காரணமாக தொழிலாளர்கள், பணியாளர்கள், அரசு ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சொந்த ஊர் நோக்கி படையெடுத்தனர்.

 நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிம்மதியான மனநிலையுடன் உறவினர்களுடன் விழாக்களை சொந்த ஊரில் சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்து விட்டு இன்று மீண்டும் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு திரும்பினர்.

இதன் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் புறப்பட துவங்கியுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக வெறிச்சோடி காணப்பட்டன திருச்சி மத்திய பேருந்து நிலையம் இன்று பயணிகளால் நிரம்பி வழிவதை காணமுடிகிறது.