தமிழகத்தில் பிங்க் நிறத்தில் வாழை - திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உருவாக்கிய புதிய ரகம்
திருச்சிராப்பள்ளி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வாழையில் மகசூல் பெருக்க மற்றும் ஊட்டச்சத்து பெருக்கம் இதன் முக்கிய அம்சங்கள் என்ற வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ஒரு பிரிவாக செயல்பட்டு வருகிறது.
Advertisement
அந்தவகையில் இந்தியாவிற்கு புதிய ரக வாழை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனைக் குறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின்தோட்டக்கலை முன்னணி விஞ்ஞானி டாக்டர் ராமஜெயம் தகவல்களை நம்மோடு பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இந்தியாவைப் பொருத்தவரை உணவிற்கு பயன்படுத்தப்படும் வாழை மரங்களை அலங்காரத்திற்காகவும் பயன்படுத்துகிறோம் எனவே அலங்கார வகை வாழைகளை கலப்பினம் செய்து உருவாக்கிட கடந்த மூன்று ஆண்டுகள் செய்த ஆராய்ச்சியில் தற்போது அதனை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
Advertisement
மூசா ஆர்னேட்டா,மூசா ரூப்ரா,மூசா வெலுட்டினா,மூசா வெலுட்டினா சப்ஸிஸ் மரக்குவனா,மூசா அக்குமினேட்டா சப்ஸிஸ் ஜெப்ரினா, என்ற ஐந்து வகைகள் கொண்டு 500 மரக்கன்றுகள் கலப்பினம் செய்யப்பட்டுள்ளது.ஆந்தோசின் பங்களிப்பே நிற மாற்றத்திற்கான காரணம்.
சிறப்பம்சம் யாதெனில் இதற்கு அதிகமான நீர் தேவைப்படுவதில்லை எனவே இவற்றை வீடுகளில் மாடித்தோட்டங்களில் கூட வளர்க்க செய்யலாம்.
பூ மற்றும் இலை பிங்க் வண்ணத்தில் இருப்பதால் இவற்றை அலங்காரத்திற்காக பயன்படுத்தலாம்.
ஆயுத பூஜை போன்ற விழாநாட்களை கருத்தில் கொண்டு இதனை விளைவித்தால் அந்நேரங்களில் சுயதொழில்போல் செய்யலாம் ஏனெனில் இவை அளவில் சிறியதாகவும் வித்தியாசமான வண்ணங்களில் இருப்பதால் வாங்குபவர்களும் விரும்பி வாங்கிச் செல்வர்.
செவ்வாழை போன்றவற்றில் கனி மட்டுமே நிறமாறியிருக்கும் இலைகள் பச்சை நிறமே ஆனால் இதன் இலைகளும் பிங்க் நிறத்தில் இருக்கும் பூக்கள் மூன்று மாதம் வரை இருக்கும் ஒரு ஒருமடலாய் விரிவதால் வீடுகளில் வாசல்பகுதிகளில் வைக்கலாம் அதுமட்டுமின்றி வீட்டில் அலங்கார ஒன்றாக பயண்படுத்தலாம் .
இவ்வாராய்ச்சி மையத்திலேயே ஒரு கன்று ரூபாய் 150 என்று விற்கப்படுகிறது .
இதனுடைய கூடுதல் சிறப்பு யாதெனில் சாதாரணமாக ஒரு வாழை மரத்தின் பக்கவாட்டில் ஒன்று அல்லது மூன்று புதிய கன்றுகள் வளரும்.
ஆனால் இவை ஐம்பதிற்கும் மேற்பட்ட புதிய கன்றுகள் உருவாக்கும் எனவே ஒன்றை வாங்கி பலவற்றை வீட்டிலேயே வளக்கலாம்.
சிறு தொட்டிகளில் கூட வளர்கலாம். மகசூலைப் பொருத்தவரை தற்போது வரை இதில் விதையுள்ள கனிகள் இருப்பதால் இவற்றை பயிரிட்டு விற்பனை செய்ய இயலாது எனவே இனிவரும் காலங்களில் விதையில்லாகனிகளை உருவாக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu