தேசிய அளவிலான கபடி போட்டியில் தங்கம் வென்ற லால்குடி வீரர்

தேசிய அளவிலான கபடி போட்டியில் தங்கம் வென்ற லால்குடி வீரர்

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த மும்முடி சோழ மண்டலத்தை சேர்ந்த தங்கப்பிள்ளை - மாதவி தம்பதியின் கடைசி மகன் வரதராஜன் (24) பொறியியல் பட்டதாரி. தேசிய அளவிலான நான்காவது மாற்றுத்திறனாளிக்கான கபடி போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் இறுதி ஆட்டத்தில் ஆந்திராவை எதிர்கொண்டு தமிழக அணி 45 - 25 புள்ளிகள் பெற்று அபார வெற்றி கோப்பையை தன்வசம் ஆக்கியது. இதில் பங்கேற்ற லால்குடி இளைஞர் வரதராஜன் தனது சொந்த ஊர் திரும்பினார்.

கிராமத்து மக்கள், நண்பர்கள், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். கபடி வீரர் வரதராஜன் கபடி மீது அதிக ஆர்வம் கொண்டு 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

அவரது கடின உழைப்பால் இந்த முறை விளையாடும் அணியில் தேர்வு செய்யப்பட்டு தங்கம் வென்றுள்ளார். தேசிய அளவிலான ஒலிம்பிக் போட்டியிலும் ஒலிம்பிக் போன்ற இன்டர்நேஷனல் அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO