திருச்சி தொங்குபாலத்திற்கு 8ஆண்டிற்க்கு பின் விமோசனம்!
திருச்சி மாநகரில் மிகவும் பழமையான மேம்பாலமாக திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் உள்ளது. மிகவும் பழமையான இந்த மேம்பாலத்திற்குப் பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டது. இந்தப் புதிய பாலத்தை இரண்டு கட்டங்களாக கட்ட திட்டமிட்டு, ரூ. 80 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
ஆனால், சென்னை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி இன்னும் நிறைவடையாமலே இருந்தது. இதற்கு காரணம், பாலம் அமைக்க ராணுவத்திற்கு சொந்தமான 67 சென்ட் நிலம் தேவைப்படுகிறது. அந்த இடம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டால்தான் பாலம் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யமுடியும். ஆனால், ராணுவ இடத்தை ஒப்படைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதால் கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதில் முதற்கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து, திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்தது. இது தற்போது மக்கள் பயன்பாட்டிலும் உள்ளது.
திருச்சியில் சாலை மேம்பாலம் கட்டுவதற்காக பாதுகாப்பு நிலத்தை கையகப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
பணிகளைத் தொடங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதனை உறுதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை பாதுகாப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை இடையே கையெழுத்தானது.
கட்டுமான வேலையை தொடங்குவதற்கு முன் நிலத்தை அளந்து அடையாள படுத்துவார்கள்.
தற்போது உள்ள சுவர் இடிக்கப்படுவதால் புதிய வளாகம் சுவர் கட்டப்படும். இரண்டு வாரங்களில் கட்டுமான பணிகளை
நெடுஞ்சாலைத்துறைமீண்டும் தொடங்கும்
என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
ஏழு ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய..