அனுமதியின்றி நடந்த பப்புக்குள் அமைதியாக நுழைந்த துணை ஆணையர் - அரைகுறை ஆடையுடன் ஆட்டம் - பிடிபட்ட அரசு அதிகாரிகள்

அனுமதியின்றி நடந்த பப்புக்குள் அமைதியாக நுழைந்த துணை ஆணையர் - அரைகுறை ஆடையுடன் ஆட்டம் - பிடிபட்ட அரசு அதிகாரிகள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஹோட்டல் அன்பு பார்க் செயல்பட்டு வருகிறது இங்கு உணவகம் கிளப் உள்ளது மேலும் வெளியூரில் இருந்து வரக்கூடிய பொதுமக்கள் தங்குவதற்கு இந்த ஹோட்டலில் வாடகைக்கு அறைகள் விடப்படுகின்றன. இதற்கிடையில் இந்த ஹோட்டலின் 4வது மாடியில் பஃப் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது. இங்கு இளம் வயதுடைய ஆண்கள் பெண்கள் ஏராளமானோர் வந்து மது அருந்துவர் அப்பொழுது மது போதையில் அடிக்கடி தகராறு நடப்பதால் காவல்துறைக்கு புகார் சென்றது இதனை தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி எந்த உரிமமும் பெறாமல் செயல்பட்டு வந்த அந்த பப்பிற்கு சில மாதமும் முன்பு சீல் வைத்தார்.

தற்பொழுது மாநகரில் உள்ள ஸ்பா மற்றும் பப்புகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக முறைகேடாகவும் உரிமம் இல்லாமல் செயல்படும் ஸ்பா மற்றும் பப்புகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சீல் வைக்கப்பட்டிருந்த அன்பு பார்க் ஹோட்டலில் உள்ள பஃப் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்ததுள்ளது. தகவலறிந்த துணை ஆணையர் அன்பு பார்க் ஓட்டலில் உள்ள பப்பிற்கு சாதாரண உடையில் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அங்கே இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்கள் மதுபானம் அருந்தி நடனமாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட பஃப் மீண்டும் எப்போது திறக்கப்பட்டது என்பது குறித்து அங்குள்ள ஊழியிடம் கேட்டறிந்த துணை ஆணையர், ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த மற்ற காவலர்களை அழைத்து அங்கிருந்த 30க்கும் மேற்பட்டோரை அதிரடியாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு அள்ளி சென்றார். இதனால் இரவு நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் காவல் நிலையத்தில் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக விசாரணை நடத்தியதில் அரசு அதிகாரிகள் சில முக்கிய பிரமுகர்களும் சிக்கி கொண்டனர். இதில் மது போதையில் இருந்த இளம் பெண்கள் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த காவல் அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து எச்சரிக்கை கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர். குறிப்பாக அனுமதி இன்றியும் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட பப்பை மீண்டும் செயல்பட வைத்த ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரவில் அதிரடியாக பப்புக்குள் தனி ஒருவராக உள்ளே நுழைந்து சட்டத்திக்கு புறம்பாக நடக்கு கலாச்சார சீரழிவை தடுக்க நடவடிக்கை எடுத்த துணை ஆணையரால் இரவில் இதுபோன்ற கூத்தை அரங்கேற்றுபவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision