2005ம் ஆண்டு பயம் ஸ்ரீரங்கத்துக்கு மீண்டும் வருகிறதா? அனைத்து துறை அதிகாரிகள் முகாம்

Aug 5, 2022 - 06:59
Aug 5, 2022 - 07:39
 1802
2005ம் ஆண்டு பயம் ஸ்ரீரங்கத்துக்கு மீண்டும் வருகிறதா? அனைத்து துறை அதிகாரிகள் முகாம்

திருச்சி முக்கொம்புவிற்கு இன்று இரவு 2 லட்சம் கன அடி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடி நீர் முக்கொம்பிற்கு வந்து கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் 90 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரியில் தற்பொழுது 57,000 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் அகிலாண்டேஸ்வரி நகரில் காவிரிக்கரை உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக  கண்டறிந்து முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு துறை வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

கரை உடையாத அளவுக்கு  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தீயணைப்பு துறையினர் ,காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் வைத்து உள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இப்பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தினார்.

மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காகவும் 50க்கும் மேற்பட்ட காவல்துறை சேர்ந்த வீரர்கள் 24 மணிநேரமும் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். 44 பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினரும் திருச்சிக்கு வருகை புரிந்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு இதே போன்ற சூழ்நிலை ஸ்ரீரங்கத்துக்கு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO