திருச்சி நீர்வளத்துறை உதவி பொறியாளரிடமிருந்து ரூ31 லட்சம் பறிமுதல்.பரபரப்பு தகவல்கள்

திருச்சி நீர்வளத்துறை உதவி பொறியாளரிடமிருந்து ரூ31 லட்சம் பறிமுதல்.பரபரப்பு தகவல்கள்
திருச்சி நீதிமன்றம் அருகில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் ஆற்று பாதுகாப்பு கோட்ட அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையினர் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.

அப்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில்  நீர்வளத்துறை உதவி பொறியாளர் கந்தசாமி ஒரு பையில் கணக்கில் வராத 31 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரிடம் விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையினர் கட்டளை மேட்டு வாய்க்கால் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக ஒப்பந்ததாரரிடம் இருந்து பெறப்பட்ட லஞ்ச பணம் என்பது தெரியவந்தது

கட்டளை மேட்டு வாய்க்காலில் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. 2019 ஆம் ஆண்டு இதற்காக ரூபாய் 335 கோடி ஒதுக்கி அரசாணை வெளியானது. அப்பணிகளுக்கு ஒப்பந்தக்காரர்கள் இந்த தொகை கொடுத்தார்கள் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அலுவலகத்தில் சோதனை முடிவடைந்த நிலையில் தற்பொழுது கந்தசாமி  வீட்டில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO