பேருந்து நிலையமா? வாகன நிறுத்தமா? பயணிகளும், பேருந்து ஓட்டுனர்களும் சிரமம்

பேருந்து நிலையமா? வாகன நிறுத்தமா? பயணிகளும், பேருந்து ஓட்டுனர்களும் சிரமம்

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ளது திருச்சி மாவட்டம். இங்கிருந்து முக்கிய மாநகரங்களுக்கு குறைந்தபட்சம் 5 மணி நேரத்தில் பயணிக்கலாம். அதற்கு ஏற்ற வகையில் திருச்சி மத்திய பேருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இங்கு நாள்தோறும் 10,000 மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மத்திய பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் அவர்களது இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் பேருந்து ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதில் பேருந்து நிறுத்துமிடத்தில் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதனால் ஒவ்வொரு மார்க்கத்திலும் நிற்கக்கூடிய பேருந்துகள் முறையாக நிறுத்த முடியாமல் வழியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து ஏறக்கூடிய பயணிகளுக்கு இந்த இருசக்கர வாகனங்களால் பெரும் சிரமத்து ஏற்படுகிறது. இது மட்டுமின்றி பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய நடைமேடைகளில் தரைக்கடை வியாபாரங்கள் இடையூறாக இருந்தாலும், கூடுதலாக இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பேருந்து பயணிகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது திருச்சி மத்திய பேருந்து நிலையம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சில சமயங்கள் பேருந்துகள் பின்புறம் இயக்கும் பொழுது இருசக்கர வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன. மத்திய பேருந்து நிலையத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், பயணிகளை இறக்கி வர கூடிய பொதுமக்கள் இந்த பொறுப்பற்ற செயலால் பேருந்து ஓட்டுனர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

போக்குவரத்து காவலர்கள் இதனை முறைப்படுத்தி மத்திய பேருந்து நிலையத்திற்கு நிற்கும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டுமென பேருந்து ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision