சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற சிறுவனுக்கு பாராட்டு - சான்றிதழுடன் பரிசு வழங்கிய காவல் ஆணையர்

சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற சிறுவனுக்கு பாராட்டு - சான்றிதழுடன் பரிசு வழங்கிய காவல் ஆணையர்

சாலை விதிகளை பெரியவர்களே பின்பற்ற தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சைக்கிளில் சென்ற ஒரு 12 வயது சிறுவன் ஹெல்மெட் அணிந்து சென்றது  எல்லோர் பார்வையும் அவன் வசம் ஈர்த்தது.  அவனிடம் சென்று ஏன் ஹெல்மெட் அணிந்து உள்ளீர்கள் ?
என்று கேட்டதற்கு காவல்துறை ஹெல்மெட் அணிய வேண்டும் என கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி சாலை விதியை பின்பற்றவேண்டும் என்று தன்னுடைய குழந்தை தனத்தோடு கூறியிருக்கிறான்.
 அவன் செயலைப் பார்த்த திருச்சி மாநகர காவல் ஆணையர் இன்று அவனது பிறந்த நாளை முன்னிட்டு அவனை குடும்பத்தோட அழைத்து அவனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி!  சிறப்பித்துள்ளார்.

அது மட்டுமின்றி அவருக்கு புதிதாக சைக்கிள் மற்றும் ஹெல்மெட், சிறப்பு சான்றிதழையும் வழங்கி அவனை ஊக்கப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவனது தாயார் கலையரசி நெகிழ்ச்சியோடு நம்மோடு பகிர்ந்து கொண்ட சில வரிகள்,
 நாங்க சாலை ஒரத்து  சிறு வியாபாரி.  எங்கள் கடைக்கு எப்பொழுதும் பொருட்கள் வாங்குவதற்காக என் மகன் சாமியப்பன்  செல்வான் அப்போதெல்லாம் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வருவதைப் பார்த்து எங்களிடம் எப்போதும் ஹெல்மெட் வாங்கி கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருப்பான்.

சரி மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்களும் ஹெல்மெட் வாங்கி கொடுத்தோம். 12 வயது தான் ஆனாலும் அவன் இருசக்கர வாகனம் ஓட்டுவோர்  எல்லோரும் ஹெல்மெட் அணிவதை பார்த்து பைக் ஓட்டும் பொழுது எனக்கும் ஹெல்மெட் வேண்டுமென்பான்.   12 வயது என்றாலும் அதன் அவசியம் அறிந்ததால் சைக்கிள் ஓட்டும்போது கூட அவன் ஹெல்மெட் அணிய மறந்ததில்லை.
என் பிள்ளை விளையாட்டாக எல்லோரும் செய்வதை பார்த்து தானும் செய்ய வேண்டுமென்று செய்த ஒரு செயல் இன்று அவனுக்கு பெருமிதத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. காவல்துறை என்றால் கண்டிப்பாக தான்  இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு அவர்கள்  பாராட்டுவார்கள் என்பதை  நேற்றைய பொழுதும் இன்றைய பொழுதும் அவர்கள் எங்களை நெகிழ்வித்ததில்  நாங்கள் உணர்ந்தோம்.
 

இதுகுறித்து அந்த சிறுவன் சாமியப்பன் சொல்லும்போது நமக்கே ஆசையாய் இருக்கிறது  சும்மா கேட்கிறார்கள் என்று தான் நினைத்தேன்.
 ஹெல்மெட் எதற்காக போட்டுக்கொண்டு  சைக்கிள் ஓட்டுகிறாய்  என்றார்கள்.
  நான் போலீஸ் திட்டுவார்கள் அதற்காக போட்டு கொண்டு வருகிறேன் என்று  பதில் சொல்விட்டு   நான் திரும்பி விட்டேன் .ஆனால் என்னை அழைத்து அவர்கள் புதிய சைக்கிள், ஹெல்மெட் சான்றிதழ் அளிப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. அத்தனை போலீஸ் மத்தியில் பயமாகத்தான் நான் இருந்ததேன். ஆனாலும் எனக்கு எல்லார் மத்தியிலும் சான்றிதழ் வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. எப்போதும் காவல்துறை என்றால் எனக்கு பயம் தான் ஆனால் எல்லோரும் என்னிடம் அன்பாக பேசியபோது சாலை விதிகளை பின்பற்றினால் எப்போதும் அவர்கள் நம்முடன் கனிவாக தான் இருப்பார்கள் என்று நான் உணர்ந்தேன். அந்த குழந்தைதனத்தில் பெரியவர்களாகிய நாம் கற்றுக்கொள்ள ஆயிரம் இருக்கின்றது .  

 திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி எல்லோர் மனதிலும் ஒரு நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 12 வயது சிறுவன் ஏற்படுத்திய விழிப்புணர்வு எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.இவர் ஹெல்மெட் அணிந்து வருவதை வீடியோவாக அ.க.ரோவிந்த்
 என்ற இளைஞன் எடுத்ததோடு மட்டுமின்றி   இன்று அந்த சிறுவனுக்கு பாராட்டையும் பெற்றுத் தந்திருக்கிறார்.சிறு செயல் ஆனாலும் இதை உலகிற்கு எடுத்துரைப்பது சமூக அக்கறை.
நம் குழந்தைகளுக்கும்  சிறு வயதிலேயே இதுபோன்ற சமூக அக்கறைகளை ஊட்டுவதன் மூலம் வருங்கால சமூகம் மிகவும் நன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH