திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் டிராக்டருடன் பேரணி மறியல் - பரபரப்பு

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் டிராக்டருடன் பேரணி மறியல் - பரபரப்பு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி நெ.1 டோல்கேட்-டில் இருந்து சென்னை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டனர்.தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட டிராக்டர் மூலமாக விவசாயிகள் திருச்சி நெ.1 டோல்கேட் இருந்து சென்னை வரை தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக சென்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக ஆளுநர் , தமிழக முதலமைச்சரிடம் அளிக்க புறப்பட்டனர். 
   

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் டிராக்டரில் உடன் செல்ல தயாராக இருந்த விவசாயிகள் அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது .கடலுக்கு சென்று வீணாகும் காவிரியின் வெள்ள நீரை அய்யாற்றுடன் இணைப்பது தமிழக பகுதியில் பெய்யும் மழை நீர் ஆலடியாறு அணைக்கு சென்று வீணாக கேரள கடலில் கலப்பதை தடுத்து தமிழகத்தில் உள்ள அணை வறண்ட   பகுதிகளுக்கும் கொண்டு வருவதற்க்கு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் ஒரு லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யாமல் இருக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட டிரக்டர்களை கொண்டு பேரணியாக புறப்பட்டனர்.கூத்தூர் பாலம் அருகே போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகளின் தேசிய நெடுஞ்சாலையில் தர்ணா போராட்டம் நடத்தி பின்னர் போலீசாருடன் பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 வருகிற மார்ச் மாதம் 5,000 விவசாயிகளுடன் நீதிமன்ற உத்தரவை பெற்று டெல்லியில் மிகப்பெரிய அளவில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn