திருச்சியில் கருப்புக்கொடி ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

திருச்சியில் கருப்புக்கொடி ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

வேளாளர், வெள்ளாளர் என்ற தங்களது சமுதாயத்தினர் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

ஏழு உட்பிரிவுகளில் வாழும் சமுதாயத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் என்ற தமிழக முதல்வரின் பரிந்துரையை ரத்து செய்ய கோரியும் ,வேளாளர், வெள்ளாளர் பெயரை மாற்று சமுதாயத்திற்கு வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியும் கருப்புக்கொடி ஏந்தி தமிழ்நாடு வஉசி பேரவை, சோழிய வெள்ளாளர் உள்ளிட்ட சமுதாயத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வஉசி பேரவையின் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தங்களுடைய சமுதாயத்தினருடைய பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்கும் பரிந்துரையை மத்திய மாநில அரசுகள் தங்களது நிலைப்பாட்டினை திரும்ப பெறாவிட்டால் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் அல்லது நோட்டாவிற்கு வாக்களிப்போம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாலும், ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாலும் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்பு காரணங்களுக்காக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO