10−ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமான மாநகர சாலை - கண்டுகொள்ளுமா திருச்சி மாநகராட்சி?

10−ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமான மாநகர சாலை - கண்டுகொள்ளுமா திருச்சி மாநகராட்சி?

தமிழகத்தின் மைய பகுதியான திருச்சி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு  இன்றைய அளவில் ஸ்மாா்ட் சிட்டியாக தேசிய அளவில் பேசக்கூடிய நகரத்தில் ஒன்றாகவுள்ளது. ஸ்மாா்ட் சிட்டியை அழகுப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அவ்வப்போது நடைபெறும்.

பணிகள் விளம்பரமாக வெளிவருகிறதே தவிர பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை  கன்டுக்கொள்ளாமல் மாகராட்சி நிா்வாகம் புறக்கணித்து வருவதால் திருச்சி மாநகருக்குள் பல சாலைகள் குண்டும் குழியுமாக வாகனங்கள் மட்டுமல்ல பொது ஜனங்ககள் நடந்து செல்லவே முடியாத நிலையில் தான் சாலைகளின் நிலைமை உள்ளது.

திருச்சி மாநகராட்சியின் உறையூா், சீராத்தோப்பு , குழுமணி சாலைகளும்,  உறையூா் காசிவிளங்கி பாலம் அருகில் தற்போது  பல கோடி ரூபாய் செலவில் புதிதாக  கட்டப்பட்டு வரும் மீன் மாா்கெட் முதல் நாச்சியாா் கோவில் வரை மாநகராட்சி பராமாிப்பில் உள்ள சாலை வழியாக தினசாி 60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் நகர பேருந்துகள் தினசரி குழுமணி, கோப்பு, குறிச்சி, நெய்தலூா் காலனி, நச்சலூா், நல்லூா், நங்கவரம், இனுங்கூா் பகுதிகளுக்கு வந்து சென்று கொன்டு இருக்கிறது, 

மேலும் வேலைகளுக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூாிகளுக்கும், விவசாய விளை பொருள்களை கொண்டு செல்லும் வண்டி வாகனங்கள் என அதிகம் செல்லும் சாலையாகவுள்ளது. 

Advertisement

இந்நிலையில்  கடந்த 10 ஆண்டு காலத்திற்கு மேலாகவே இந்த மாநகராட்சி சாலையை கண்டுகொள்ளாமல் இருப்பதால் பேருந்துகளிலும், வண்டி வாகனங்களிலும் செல்பவா்கள் மட்டுமல்ல நடந்து செல்வோா் கூட மிகுந்த சிரமத்திற்கும் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாது இச்சாலையை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இல்லையென்றால் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.