காவல் நிலையத்தில் ஸ்வீட் எடு கொண்டாடு - மாணவர்களின் பயத்தை போக்கிய காவலர்கள்

காவல் நிலையத்தில் ஸ்வீட் எடு கொண்டாடு - மாணவர்களின் பயத்தை போக்கிய காவலர்கள்

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் E-4 தில்லைநகர் காவல்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாணவர்கள் பங்குபெற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. காவல்நிலையத்திற்கு முதன்முறையாக வருகை தந்த மாணவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர்கள் இனிப்புகள் கொடுத்து வரவேற்பறையில் அமர வைத்தனர். மாணவர்கள் காவல் அதிகாரிகளுக்கு மலர்கொத்து வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு காவல் நிலையத்தில் தினசரி நடைபெறும் பல்வேறு செயல்களை உதவி ஆய்வாளர் சிவகுமார் விளக்கிக் கூறியதாவது, கல்வி தான் நமது அடிப்படை வாழ்வை மாற்றி அமைக்கக்கூடியது. இருக்கின்ற அனைத்து துறைகளில் முதன்மையானது கல்வித்துறை தான்.  நீங்கள் நன்கு படித்து உயர்பதவிகளுக்கு வந்து சேவை செய்திடவேண்டும். காவல்துறை உங்களின் நண்பன். தினசரி காவல்நிலையத்தில் பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றது. முதன் முதலாக 1888ல் மதராஸ் காவல்நிலையம் அமைக்கப்பட்டது.

முதலாவதாக ஒருவர் காவல்நிலையம் வரும்போது அங்கு புகார் தெரிவிக்க வரும் நபரை அழைத்து அமரவைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய அலுவலர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காவல்நிலையம் முழுவதும் CCTV கண்காணிப்பு உள்ளது போலவே திருச்சி மாநகரம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதை எடுத்துக்கூறினார்.

முதுநிலை உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் காவல்நிலையத்தில் உள்ள பல்வேறு அறைகள்,  எழுத்தர்களின் பணி, காவல்நிலைய ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை, காவலர்களின் துப்பாக்கிகள் பயன்பாடு, தோட்டாக்கள் பற்றி மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் மிக அழகாக விளக்கிக்கூறினார். இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன், ஆசிரியர்கள் சரண்யா, லில்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO