திருச்சியில் ம.நீ‌.ம தலைவர் கமல் - உற்சாக வரவேற்பு!!

திருச்சியில் ம.நீ‌.ம தலைவர் கமல் - உற்சாக வரவேற்பு!!

திருச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

தலைநிமிரட்டும் தமிழகம் என்ற பெயரில், தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்காக இன்று சென்னையிலிருந்து மதுரை சென்றுள்ளார்‌. தொடர்ந்து தற்போது திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வந்து இறங்கினர்.

அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான கார்களுடன் , ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து தற்போது தனியார் விடுதியில் சென்றுள்ள அவர் இன்று மாலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் பொது மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO