திருச்சி என்எஸ்சி போஸ் ரோடு பெரியகடை வீதி சின்னக்கடை வீதியில் கடைகள் திறப்பு பொதுமக்கள் நடமாட்டம் குறைவு

திருச்சி என்எஸ்சி போஸ் ரோடு பெரியகடை வீதி சின்னக்கடை வீதியில் கடைகள் திறப்பு பொதுமக்கள் நடமாட்டம் குறைவு

தமிழக அரசு ஏற்கனவே கடந்த 10ஆம் தேதி முதல்  அனைத்தையும் 24ஆம் தேதி வரை அனைத்து கடைகளையும் கோவிட் தொற்று இண்டாம் அலை பரவலை தடுக்க மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.  இன்று மதியம் இரண்டு நாட்கள் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு  தளர்வு கொடுக்கப்பட்டதால் திருச்சி என்.எஸ்.சி போஸ் ரோடு, தேரடி கடை வீதி, சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிறு கடைகள் மற்றும் சிறு நகை கடைகள் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளன. சாலையோர கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுடைய நடமாட்டம் சிறிது அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர்களும் தற்போது சாலையில் சென்று கொண்டிருக்கின்றனர். மாலை 6 மணிக்கு மேல் வணிகம் ஓரளவு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் 12 நாட்களாக கடைகளை மூடி வைத்திருந்தவர்கள் தற்போது கடைகளைத் திறந்து வைத்துள்ளனர்.

இன்றும் நாளையும் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி திங்கள் கிழமையிலிருந்து ஒரு வாரம் முழு ஊடரங்கு மீண்டும் துவங்குவதால்  கடைகளை திறந்து வைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.நாளை தான் வணிகம் ஓரளவு நடைபெறும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று பொதுமக்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவு எனவும் குறிப்பிட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK