தொற்று பரவ நம்முடைய சுற்றுப்புறம் தூய்மையில்லாமல் இருப்பதே காரணம்.

தொற்று பரவ நம்முடைய சுற்றுப்புறம் தூய்மையில்லாமல் இருப்பதே காரணம்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்து கொண்டிருக்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க மறந்ததே.

நாம் இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருந்தாலே இந்த பெரும் தொற்று நம்மை இத்தனை துயரத்திற்கு ஆளாக்கி இருக்காது. ஆறு, வயல்வெளி, சாலை என எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், குப்பை மேடுகள், குப்பைகளுக்கு நடுவே வாழும் மனிதர்களுக்கு தொற்று பரவாமல் என்ன தான் ஆகும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுபற்றி எம்.ஜி.ஆர் நல்பணி மன்ற செயலாளர் மற்றும் சமூக ஆர்வலர் கண்ணன் என்.ராமகிருஷ்ணன் கூறுகையில், இவ்வுலகில் பிறந்த
ஒவ்வொருவரும் இயற்கையை சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினைகளை தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி இக்கட்டான சூழலில் நாம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கும் பொழுதும் கூட நாம் இதற்கான காரணங்களான நம் சுற்றுச்சூழல் தூய்மை இல்லாமல் இருப்பதை நாம் மறந்து விட்டோம்.

திருச்சி பொருத்தவரை சுற்றுச்சூழல் தூய்மையற்றதாகவே காணப்படுகிறது. நமது சுற்றுப்புறத்தை சீரழித்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு வழிகளை செயற்கையாக தேடினால் நாம் தோல்வியையே சந்திக்க நேரிடும். மரங்களை அழித்துவிட்டு ஏசியை பயன்படுத்தினோம். இன்றைக்கு இயற்கையான சுவாசத்தை கூட பெறமுடியாமல் செயற்கை வழி ஆக்சிஜன் தேட வேண்டிய நிலையில் உள்ளோம்.

தூய்மை இந்தியா சுகாதார இந்தியா என்பதெல்லாம் பெயரளவிலேயே இருக்கின்றது. சுற்றுச் சூழலை பாதுகாக்காததே நம்முடைய அழிவிற்கு காரணமாக மாறிவிட்டது என்கிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK