மணல் கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுதலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரிக்கை
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பரிந்துரையின் பேரில், மணல் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இலால்குடியை சேர்ந்த முகமது அப்துல் காதர் மகன் சபியுல்லா என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க இன்று 22.05.2021 திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
நடப்பு ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட 23 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 4 நபர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டதினால் குண்டர் தடுப்பு
சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மணல் கடத்தலில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட காவல் நிலைய சரக அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மணல் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அதுமட்டுமல்லாமல் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,
அரசு மதுபான விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கண்டறிந்து
கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் துறை
கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK