பொன்மலை ரயில்வே 50 லட்சம் மதிப்புள்ள ரயில் என்ஜின் மோட்டார் திருட்டு.
திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் இரயிலுகளில் இணைக்கப்படும் மின் மோட்டாரை திருடி வெளியே கொண்டு வந்த 2 பேர் கைது - மின் மோட்டார் பறிமுதல். பொன்மலை இரயில்வே போலீசார் நடவடிக்கை.
திருச்சி பொன்மலையில் மத்திய அரசின் நிறுவனமான இரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 5000 த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு இரயில் பெட்டிகள், இரயில் இன்ஜின்கள் மற்றும் புகழ்வாய்ந்த ஊட்டி மலை இரயில் எஞ்சின்கள் பழுதுபார்த்து சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது.
வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இரயில்வே பணிமனைக்கு தேவையான உதிரி பாகங்கள் லாரிகளில் கொண்டு வருவது வழக்கம். அதேபோல் பணிமனையில் இருந்து உதிரி பாகங்களை வெளியே கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளி அருகே மர்மமான முறையில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் இரயில் என்ஜினுக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் ஒன்று இருந்தது இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இரயில்வே போலீசார் , சந்தேகப்பட்டு அந்த லாரியில் இருந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினார்கள்.
பணிமனையில் இருந்து மின் மோட்டாரை கடத்தி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது சம்பந்தமாக 1.கோபால் - (30) 2.மணிகண்டன் ஆகிய இரண்டு பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள ஒருவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பணிமனையில் கிளீனிங் ஒர்க் நடந்து வருவதாகவும் அதை இவர்கள் காண்ட்ராக்ட் எடுத்துள்ளதாகவும், இதனால் தினமும் லாரிகளில் தொழிற்சாலைகள் இருக்கும் தேவையற்ற குப்பை மற்றும் தேவையற்ற மணல் முட்டுகளை அகற்றுவதாகவும், அப்பணியில் மின் மோட்டாரை லாரியில் திருடி வைத்து மேலே மணலை கொட்டி கடந்த முயன்றதும் விசாரணையில் ஒத்துக்கொண்டனர்.
இது குறித்து இரண்டு பேர் மீதும் இரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக.1.கிரண் rpf ஆய்வாளர் 2.rpfஎஸ்.ஐ .வெங்கடாசலம் 3.rpf கான்ஸ்டபிள் சதீஷ்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn