ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் 43 பவுன் நகை, ரூ 35 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

ஓய்வு பெற்ற அரசு  ஊழியரின் வீட்டில் 43 பவுன் நகை, ரூ 35 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

சிதம்பரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார்( 73). இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அருண் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் பிரபு திருவெறும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புள்ளியல் துறையில் பணியாற்றி வருகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற குமார் பின்னர் அப்பாத்துரை ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரம் ரங்கா நகரில் சொந்தமாக வீடு கட்டி கணவன், மனைவி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் வசிக்கும் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவரின் அக்காவிற்கு உடல்நலம் சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக நேற்று காலையில் கணவன், மனைவி இருவரும் சென்னைக்கு சென்றுள்ளனர். பின்னர் இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு காலையில் ரங்கா நகரில் உள்ள வீட்டிற்க்கு வந்துள்ளனர்.

அப்போது வீட்டை திறந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது பீரோவை சோதனை செய்த போது 43 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது. மாடி வழியாக வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகை,பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சம்பவத்துக்கு வந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் சமயபுரம், கொள்ளிடம் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து திருட்டு போனது குறித்து விசாரணை செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் நிலா மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் நிலா வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது.

கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் குமார் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision