கொலை வழக்கில் திருச்சி திமுக பிரமுகருக்கு ஆயுள் தண்டனை
திருச்சி சமயபுரம் மெயின்ரோட்டில் உள்ள சுந்தரம் மஹால் கல்யாண மண்டபம் அருகே ரியல்எஸ்டேட் தொழில் போட்டியில் சமயபுரம் மாடக்குடி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் சேகர் கடந்த 2015ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அந்த வழக்கில் தொடர்புடைய 13 நபர்களில் ஆச்சி குமார் (எ) குமார், ராஜா ஆகிய இருவர் இறந்துவிட்ட நிலையில், திருச்சி மத்திய மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜான்சன் குமார், இளையராஜா, நாட்டாமை என்கின்ற நடராஜன், கனகராஜ், ஹரிகிருஷ்ணன், செந்தில் ஆகிய 6பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சரவணகுமார்(எ) கோழி சரவணன், மனோகர், சுரேஷ், ராஜி (எ) செல்வம், பால் எமர்சன் ஆகியோர் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் முதல் குற்றவாளியான ஆச்சிகுமாரின் அண்ணன் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேகர் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இது பழிக்கு பழியாக நடந்த கொலையாகவும் இருக்கிறது.
இந்தவழக்கில் தொடர்புடைய இளையராஜா பல்வேறு கொலை, நில அபகரிப்பு என பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அதேபோன்று ஜான்சன் குமார் திருச்சி திமுக மத்திய மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உள்ளார். மேலும் ஜான்சன் குமார் மீது லால்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 207 முறை பத்திரப்பதிவு செய்த குற்றச்சாட்டு உள்ளது.