திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரூ.68.12கோடி வருவாய் கோட்ட ரயில்வே முதுநிலை வணிக மேலாளர் பேட்டி

திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரூ.68.12கோடி வருவாய் கோட்ட ரயில்வே முதுநிலை வணிக மேலாளர் பேட்டி

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார்... திருச்சி - விழுப்புரம் இரட்டை ரயில் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டன. விழுப்புரம் - தஞ்சை, விழுப்புரம் - நாகை இரட்டை ரயில் பாதை பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவித்தார்.

ரயில்வே துறை மேம்படுத்த நவீன திட்டங்களை கண்டுபிடிக்கும் தொழில் முனைவோர்கள் வரவேற்கப்படுகின்றனர். 11 வகையான தலைப்புகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ.150 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

திருச்சி ரயில்வே கோட்ட பகுதியில் மீட்டர்கேஜ் இருப்புப்பதை திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி பகுதியில் 7 கிலோ மீட்டர் மட்டுமே அகற்றப்பட வேண்டி உள்ளது. வேறு எங்கும் மீட்டர் கேஜ் பாதைகள் இல்லை. ஆகஸ்ட் மாதத்தில் இந்த 37 கிலோ மீட்டர் அகல ரயில் பாதையாக மாற்றப்படும். மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும் 2021 ரூ19.64 கோடியாக இருந்தது இந்தாண்டு 68.12 கோடி மூன்று மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் ரூ.115 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் 229 கோடி வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO