சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 21 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை 88 லட்சம்
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் பக்தர்கள் செலுத்தப்படும் காணிக்கைகளை மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி இம்மாதம் இரண்டாவது முறையாக நேற்று (29.10.202) கோவில் இணை ஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை வெட்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், திருச்சி உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோவில் மேலாளர் ராசாங்கம், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் பிருந்தா நாயகி ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன.
இதில் காணிக்கையாக ரூபாய் 88 லட்சத்து 53 ஆயிரத்து 488 ரொக்கம், 2 கிலோ 901 கிராம் தங்கம், 3 கிலோ 480 கிராம் வெள்ளி 85 அயல்நாட்டு நோட்டுகள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision