நீட் தேர்வு மூலம் திமுக அரசியல் செய்கிறது: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

நீட் தேர்வு மூலம் திமுக அரசியல் செய்கிறது: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழகத்தில், நீட் தேர்வு மூலம் திமுக அரசியல் செய்து வருகிறது. மாணவர்களும், பெற்றோரும் அவர்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம், நீட்டை எப்போதும் நீக்க முடியாது என தேமுதிக கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

நாமக்கல்லில், தேமுதிக 25-ஆம் கொடி நாள், மே தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாநகர, தேசிய முற்போக்கு திராவிட கழகம் தெற்கு மாவட்டம் சார்பில் கழக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நாமக்கல் குளக்கரை பூங்கா சாலை பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.இதில் மாநகர மற்றும் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அம்மன் வே. வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநகர மாவட்ட துணைச் செயலாளர் டி. ஜெயக்குமார்

வரவேற்புரை ஆற்றினார். மாநகர கழக அவைத் தலைவர் சி பி டி எம். செல்வராஜ், மாநகர கழகப் பொருளாளர் நாகா எஸ். தேவராஜ், தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சி. ஜெயபால், தெற்கு மாவட்ட கழக பொருளாளர் வி பி ராஜ் பரத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக கழக கொள்கை பரப்பு செயலாளர் முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், முன்னாள் எம்எல்ஏ கழக துணைச் செயலாளர் ஆர். சுபா ரவி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் டி.எஸ். விஜய சரவணன், ஆசிரியர் பட்டதாரி அணி மாநில துணைச் செயலாளர் எஸ். செல்வராஜ், கலை இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பி. கணேசன், தலைமைக் கழக பேச்சாளர் கே. கோபால், தலைமை கழக பேச்சாளர் வி. சரவணகுமார்,

 வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் பி. சௌந்தரராஜன், மாவட்டக் கழக பொருளாளர் ஆர். மகாலிங்கம், மாநகர துணை செயலாளர்கள் எம் மாதேஸ்வரன் எம் பி விஜயன், சரோஜா, மற்றும் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி. ராமசாமி, ஏ ஜி ஆர் வி கே சரவணன், கே. குப்புசாமி, சி. செல்வி, மாவட்ட வழக்கறிஞர் அணி பரசுராமன்,எம். ஜெகநாதன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கே .ராமன், கபிலர் மலை ஒன்றிய செயலாளர் வி. வீரத்திலகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசியதாவது..திமுக அரசு மகளிருக்கு ரூ.1,000 வழங்கி மூளைச் சலவை செய்கிறது. அதன் பிறகு மதுபான கடைகள் மூலம்,

இந்தப் பெண்ணின் கணவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை வசூலித்துக் கொள்கிறது. தேமுதிக ஆட்சிக்கு வந்தால் வீடு தேடி ரேஷன் பொருட்கள், மருத்துவம், கல்வி இலவசம் என அறிவித்தார். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. 2026-இல் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக தேமுதிக போராடி வருகிறது.புது தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க 4 ஆண்டுகளாக முதல்வர் செல்லவில்லை. தற்போது செல்கிறார், கனிமொழி மத்திய நிதி அமைச்சரை சந்தித்து பேசுகிறார்.

இதற்கான காரணத்தை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால் தேமுதிக மீது எந்த புகாரையும் கூற முடியாது. எனது கணவரான விஜயகாந்த் எங்கும் மறைந்து விடவில்லை. அவர் தெய்வமாக நின்று கட்சியையும், எங்களையும், தொண்டர்களையும் வழி நடத்தி செல்கிறார். தேமுதிக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க முடியவில்லையே என விஜயகாந்த் மறைவுக்கு பிறகு மக்கள் வேதனையுடன் புலம்புவதை கேட்க முடிகிறது. அந்த நிலை 2026 இல் கட்டாயம் மாறும்.அவருடைய நினைவிடத்தில் தினசரி 2,000 மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டுகிறது. தெய்வமாக நினைத்து அவரை மக்கள் வழிபட்டு வருகின்றனர். தேமுதிக மீண்டும் எழுச்சியுடன் வலம் வரும் என்றார்.இந்த கூட்டத்தில், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர் சுபா மற்றும் நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் மாநகர, மாவட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision