திருச்சி மாநகராட்சியில் திமுக எத்தனை வார்டுகளில் போட்டி ?

திருச்சி மாநகராட்சியில் திமுக எத்தனை வார்டுகளில் போட்டி ?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் தேர்தலை சந்திக்க உள்ளது. தனது கூட்டணிக் கட்சிகளுடன் இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுக்கான சீட் பங்கீடு தொடர்பாக திமுகவின் முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

மாநகராட்சி 65 வார்டில் திமுக 50 வார்டில் போட்டியிட போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது .மீதமுள்ள 15 வார்டுகள் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் - 5 மதிமுக - 2, சிபிஐ 1, சிபிஎம் 1, விசிக 1, IUML 1, மனித நேய கட்சி 1 ஆகிய கவுன்சிலர் சீட்டுகளை கொடுப்பதாக தகவல் கசிந்துள்ளது. 15 சீட் கூட்டணிக்கு ஒதுக்கி உள்ளது திமுக.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக அனைத்து கட்சிகளும் கூடுதல் வார்டு தர வேண்டும் என்றதற்க்கு இதயத்தில் இடம் என்ற பதில் அமைச்சர் கே.என்.நேருவிடம் இருந்து வந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திருச்சி மாநகராட்சி  65 வார்டு கூட்டணி கட்சிகளுடன் பங்கீடு பரபரப்பான கட்டத்தை எட்டிவிட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn