பழங்குடியின மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

பழங்குடியின மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

இந்தியாவில் இன்ஜினியரிங் படிப்பு பயில புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே இ இ (JEE) நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் ஜே இ இ முதன்மை தேர்வில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சை மலையில் உள்ள பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவி ரோகிணி 73.8% மதிப்பெண் பெற்று மாநிலத்தில் பழங்குடியின பள்ளிகளில் முதல் மாணவியாக தேர்வு பெற்றுள்ளார்.

இந்த மாணவி திருச்சி துவாக்கிடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் ( என் ஐ டி) இன்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாணவி ரோகினிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision