திருச்சியில் காலை 9 மணி வரை 9.99% வாக்குகள் பதிவு!!

திருச்சியில் காலை 9 மணி வரை 9.99% வாக்குகள் பதிவு!!

திருச்சி மாவட்டத்தில் காலை 7 மணி முதல் தற்போது வரை 9.99% சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. 

Advertisement

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆறாம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே சமூக இடைவெளி கடைபிடித்து முகக் கவசங்கள் அணிந்து பொதுமக்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். திமுக, அதிமுக முக்கிய வேட்பாளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் அதிகப்படியான நிலையில் வாக்கு செலுத்தி வருகின்றனர். தற்போது வரை 9.99% வாக்கு பதிவாகியுள்ளது.