தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி - மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார் என கே.என்.நேரு பேட்டி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி - மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார் என கே.என்.நேரு பேட்டி

2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளை  நடைபெறுகிறது. அதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள9 சட்டமன்ற தொகுதிகளிலும் 3,292 வாக்குச்சாவடிகளும் 1,147 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுக்ளது.மாவட்டத்தில் 11,35,780 ஆண் வாக்காளர்களும், 12,02,728 பெண் வாக்காளர்களும், 237  மாற்று பாலினத்தவர் என  மொத்தம் 23,38,745 வாக்காளர்கள் உள்ளனர். 156 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 

தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் 5,688 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 3,950 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வி.வி.பே.ட் இயந்திரம் 4,247 தயார் நிலையில் இருந்தன.அந்த இயந்திரங்கள் அது தவிர வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கான முக கவசம்,கையுறை உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள், வாக்குப்பதிவு மையத்திற்கு தேவையான எழுதுகோல்,காகிதம்,மை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அந்த அந்த வாக்குச்சவடி மையங்களுக்கு  சென்று தயாராக இருந்தது.

திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்திலுள்ள வாக்குச்சாவடியில் மேற்கு தொகுதி வேட்பாளரும்,
திமுக முதன்மைச் செயலாளருமான கே.என் நேரு தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.என் நேரு தமிழகம் முழுவதும் 
திமுகவிற்கு சாதகமான அலை வீசி வருகிறது.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி - மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார்.

எங்கு சென்றாலும் மக்கள் எங்களுக்கு நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸௌஅப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr