"தலைகவசம் இல்லையே பெட்ரோல் இல்லை" - திருச்சி மாநகர காவல்துறை அதிரடி!!

"தலைகவசம் இல்லையே பெட்ரோல் இல்லை" - திருச்சி மாநகர காவல்துறை அதிரடி!!

திருச்சியில் கடந்த ஆண்டு விபத்துக்கள் சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிலையில் மாநகரங்களில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். பெட்ரோல் பங்குகளில் தலைக்கவசம் இல்லாதவர்களுக்கு எரிபொருள் நிரப்ப கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மாநகர கன்டோன்மென்ட் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேடில் உள்ள பெட்ரோல் பங்கில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறியும், அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களை அழைத்து தலைக்கவசம் அணியாதவர்கள் பெட்ரோல் வழங்க வேண்டாம் என தெரிவித்தனர்.

மேலும் வரும் காலங்களில் திருச்சி மாநகரங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தலைக்கவசம் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை( No Helmet - No Petrol ) என மாநகர காவல் துறையினர் நடைமுறைப்படுத்த உள்ளனர்.

எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் வரும் காலங்களில் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் விபத்துக்களை குறைக்கலாம் எனவும், ஹெல்மெட் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு சென்று சேரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a