தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இணையவழி வழிகாட்டி நிகழ்வு
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களுக்கும் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவாலான செயல் அவர்கள் எந்த துறையை தேர்வு செய்து அவர்களுடைய கல்வி பயணத்தை தொடர்வது என்பது தான். தேர்வு செய்யும் துறையினால் அவர்கள் வாழ்வில் வெற்றி பெற்று வேலை வாய்ப்புகள் கிடைக்குமா? என்ற பல கேள்விகள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் உள்ளங்களில் தினம்தோறும் தோன்றிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கும் விதமாக, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் மற்றும் பாரத் பல்கலைக்கழகம் இணைந்து 12 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய எதிர்கால கல்வித்துறையை தேர்ந்தெடுப்பதற்காக இணைய வழியில் ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்துள்ளனர்.
தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் NIE என்பது நியூஸபேப்பர் இன் எஜுகேஷன் (NEWSPAPER IN EDUCATION ) என்ற பெயரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய எதிர்கால கல்வி பயணத்தை தொடர்வதற்கான "எதிர்கால வேலைகள் " என்ற கருப்பொருளில் இதனை தொடங்கியிருக்கின்றனர். இணையதளம் வழியாக நடைபெறும் இவ்ஆலோசனை பட்டறை 2021 ஜூலை 7 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்படும். அமர்வின் போது மாணவர்களுக்கு பல்வேறு இளங்கலை படிப்புகள் மற்றும் அவர்களின் ஆர்வம் உள்ள பகுதிகள் குறித்து அதில் உள்ள வேலைவாய்ப்பு சிறப்பம்சங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். 2020 - 21 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த ஆலோசனை பட்டறையில் கலந்து கொண்டு அவர்களுடைய சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
பயிற்சி பட்டறைக்கு பின்னர் ஜூலை 12 முதல் 23-ம் தேதி வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்தியோகமாக இயற்பியல், கணிதம், வேதியியல், மற்றும் கணினி அறிவியல், (பொறியியல் ஸ்ட்ரீம்) இணையதளத்தில் திறனறிவு தேர்வு நடத்தப்படும் பயிற்சியின் போது மாணவர்களுக்கு தேர்வு குறித்த விளக்கங்கள் விளக்கப்படும். இத்தேர்வில் வெற்றி பெறும் முதல் ஐந்து வெற்றியாளர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள பரிசுக்கூப்பனும், முதல் 250 மாணவர்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள பரிசு கூப்பன்களும் கிடைக்கும்.
மேலும் அவர்கள் பங்குப்பெற்றத்தற்கான சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்களுக்கு வழிகாட்ட நினைக்கும் பள்ளிகள் தங்களுக்கு விருப்பமான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்து கொடுக்கப்பட்ட எண்ணிற்கு (8883189527) தெரியப்படுத்தலாம். பள்ளிகள் தங்களுக்கு விருப்பமான தேதி மற்றும் நேரத்தை தெரிவித்து அனுப்பியதும் மாணவர்கள் பங்கேற்க ஒரு இணைப்பு அவர்களுக்கு பகிரப்படும். பங்கு பெறும் மாணவர்களுக்கு ஒரு நாள் மட்டும் 40 நிமிடம் இந்த பயிற்சி பட்டறை நடத்தப்படும். திறனறி தேர்வும் 40 நிமிடங்கள் இணையவழியில் நடத்தப்படும். ஒரு நாளைக்கு 500 மாணவர்களுக்கு இந்த பயிற்சி மூலம் ஆலோசனை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY