உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி சோதனை -போலி தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்
திருச்சிராப்பள்ளியில் சஞ்சீவி நகரில் உள்ள குறிஞ்சி தெருவில் போலியான தண்ணீர் பாட்டில்கள் தயாரிப்பதற்காக தொலைபேசி மூலமாக வந்த புகாரை அடுத்து பரிசோதனையின் மூலம் தகவல் உண்மை என கண்டுபிடிக்கப்பட்டது.
பழைய பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை வாங்கி எந்தவித உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் அந்த பாட்டில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் தண்ணீரை நிரப்பி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று போலியாக விற்பனை செய்து வருவது அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2000 தண்ணீர் பாட்டில்களையும் சீர் செய்வதற்காக வைத்திருந்த 5000 தண்ணீர் பாட்டில்களில் மூடிகளையும் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 இன் படி பிரிவு 56& 58 ன் படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு கூறுகையில் பொதுமக்களும் வணிகம் செய்பவர்களும் இது போன்ற போலியான தண்ணீர் பாட்டில்கள் அல்லது போலியான உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது.
இது போன்ற தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு உள்ள உணவுப் பொருட்களை மட்டுமே வாங்க அல்லது விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். உணவு சம்பந்தமான எந்த வித தகவலையும் தொலைபேசி மூலமாக தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU