மரக்கன்றுகள் நட தோண்டப்பட்ட குழிகள் குப்பை தொட்டிகளாக மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு 

மரக்கன்றுகள் நட தோண்டப்பட்ட குழிகள் குப்பை தொட்டிகளாக மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு 

திருச்சி மாநகராட்சியில் பசுமை பரப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திருச்சி மாநகர் முழுவதும் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி இரண்டு மாதங்களாக அதனைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் சில பிரதான சாலைகளில் மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டப்பட்ட குழிகள் குப்பைக கழிவுகள் போடும் இடமாக மாறியுள்ளது பிளாஸ்டிக் மதுபான பாட்டில்கள் போன்றவைகளை நிரப்பியுள்ளன.

ஜூன், ஜூலை மாதங்களில் மாநகராட்சி நிர்வாகத்தால் அண்ணா நகர், தில்லை நகர் போன்ற சாலைகளின் இருபுறங்களிலும் நாட்டு, பாரம்பரிய மரங்களை நடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. ஏற்கனவே சாலைகள் குறுகியதாக இருக்கும் நிலையில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை அளிக்காமல் மாநகராட்சியின் செயல் குறித்து பொதுமக்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

மாநகரின் பிரதான சாலைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடுவது ஆக குழிகள் வெட்டப்பட்டு மரக்கன்றுகள்   நடப்பட்டன. அவையும் பராமரிப்பின்றி  செடிகளும் இறந்து விட்டன. இப்போது அந்த குழிகளில் முககவசம் பிளாஸ்டிக் கழிவுகளே அதிக அளவில் காணப்படுகின்றது. குழிகள் தோண்டாமல் அப்படியே விட்டு சென்று இருந்தாலும் பொதுமக்கள் தங்களுடைய பயன்பாட்டிற்கு பயன்படுத்தி இருப்பார்கள். 

அதையும் மீறி தற்போது அந்த குழிகள் தோண்டப்பட்டு பயன்பாடின்றி உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வணிக நிறுவனங்கள் சாலைகளின் ஓரம் இருந்த இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக பயன்படுத்தி கொண்டனர். இதனால் அந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்.... கூடிய விரைவில்  தோண்டப்பட்ட குழிகள் அனைத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn