திருச்சி பொன்மலை பணிமனையில் உருவாக்கப்படும் மலை ரயில் என்ஜின் 70 சதவீத பணிகள் நிறைவு
திருச்சி பொன்மலை பணிமனையில் உருவாக்கப்பட்டு வரும் மலை ரயில் என்ஜின் பணிகள் கிட்டத்தட்ட 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முழுவதுமாக உள்நாட்டு பொருட்கள் கொண்டு உருவாக்கப்படும். இந்த மலை ரயில் இன்ஜின் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்திற்குள் முழுமையாக பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெறும் என்று பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 கோடியே 50 லட்சம் செலவில் நிலக்கரியால் எரியூட்டப்பட்ட நீராவியால் இயக்கப்படும் என்ஜின் மற்றும் 9 கோடியே 80 லட்சத்தில் பர்னஸ் ஆயில் மூலம் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் என்ஜின் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
புராதான வடிவமைப்பும் புதிய தொழில்நுட்பத்தோடு உருவாக்கப்படும் மலை ரயில் என்ஜின் வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூழல் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO