திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் மறு அறிவிப்பு வரை தற்காலிகமாக மூடல்!!

திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் மறு அறிவிப்பு வரை தற்காலிகமாக மூடல்!!

தமிழகத்தில் கொரோனோ நோய்த்தொற்று இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திருச்சியியை பொருத்தவரை தினம்தோறும் 300-க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி இன்று முதல் பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியின் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக இருக்கும் முக்கொம்பு மேலணை பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது

தமிழ்நாடு பொதுப்பணித் துறை சார்பாக கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கொம்பு சுற்றுலா மையம் பூங்கா மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பார்வையாளருக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu