உணவு பார்சல் மூலம் கொரானா வைரஸ் பரவுமா?

உணவு பார்சல் மூலம் கொரானா வைரஸ் பரவுமா?

கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்து கொண்டே இருக்கிறது. உணவு மூலம் கொரோனா உடலுக்குள் போய் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் வந்திருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "கொரோனா வைரஸ் உணவு, பேக்கேஜிங், சமைப்பது, அதை டெலிவரி செய்வது ஆகியவற்றின் மூலம் என எந்த வகையிலும் பரவாது. எனவே மக்களிடம் இந்த அச்சம் தேவையில்லை.

அவ்வாறு பரிசோதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உணவுப் பார்சல்கள் மூலம் இதுவரை 10க்கும் குறைவானவர்களே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று நிச்சயம் பரவாது. அது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளித் திவலைகள், சுவாசப்பாதை திவலைகளின் மூலம் மட்டுமே பரவும். சமீபத்திய லான்செட் கட்டுரையில் கொரோனா வைரஸானது காற்றின் மூலமும் பரவும் என்றொறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனினும் பார்சல் பொருட்களின் மூலம் கோவிட்-19 பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. பார்சல் செய்யும் பொருட்களின் மீது, நாள் கணக்கில் இல்லாவிட்டாலும், இந்த வைரஸ் சில மணி நேரங்கள் வரை செயல்தன்மையுடன் இருக்கும் என்று ஆய்வகங்களில் நடந்த பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன. கார்ட்போர்டு அட்டை மற்றும் பல வகை பிளாஸ்டிக் பரப்புகளின் மீது இந்த வைரஸ் சில மணி நேரம் செயல் தன்மையுடன் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

குறைவான வெப்பநிலையில் அதிக செயல்தன்மையுடன் இந்த வைரஸ் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பல உணவுப் பொருட்கள் குறைந்த வெப்ப நிலையில்தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. இருந்த போதிலும், ஆய்வகங்களுக்கு வெளியிலும் இதே முடிவு பொருந்தி வருமா என்பது குறித்து சில விஞ்ஞானிகள் கேள்வி எழுப்புகின்றனர்

உணவு மூலம் கொரானா  வைரஸ் பரவாது எனினும் உணவு வாங்கும் இடங்களிலிருந்து கொரானா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81