`ஆடிபட்டம் தேடி விதை!' - மலைக்கோட்டையில் விதை திருவிழா 

`ஆடிபட்டம் தேடி விதை!' - மலைக்கோட்டையில் விதை திருவிழா 

பாரம்பரிய விதைகள் பகிர்வு ``தற்சார்பு வாழ்வியலை மீண்டும் கொண்டுவரணும், இயற்கையைக் காக்கணும் என்ற காரணத்துக்காக, பாரம்பரிய விதைகளை கையிலெடுத்து  விதைத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.
 15 ஆம் ஆண்டு திருச்சி மலைக்கோட்டை விதை திருவிழாவை பசுமை சிகரம் அறக்கட்டளை மற்றும் அகத்தியர் விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் இணைந்து நடத்த உள்ளனர்.
வரும் சனிக்கிழமை31.07.2021அன்று திருச்சி சீனிவாச மஹாலில்காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை  நடைபெற இருக்கிறது.நஞ்சில்லா காய்கனி உற்பத்தி என்ற கருப்பொருளில்  சிறப்பு விருந்தினராக நாட்டு மாடு வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு மூலிகை வைத்தியம் முனைவர் புண்ணியமூர்த்தி இருக்கிறார். 

இவ்விதை திருவிழாவின் ஒருங்கிணைப்பாளரான விதை யோகநாதன் அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கையில், நம் முன்னோர்களின் பாரம்பரிய விவசாயத்தின் சிறப்பை உணர்ந்து, இயற்கை விவசாயத்தில் இன்று இளைஞர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.பாரம்பரிய விதைகள் கையில் எடுக்கப்பட்டு தற்சார்பை நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது. இயற்கை விவசாயம் செய்யத்துடிக்கும் பலருக்கும் வழிகாட்டவும், விதைத் தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்விதை  திருவிழாவானது 15வது ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.

60 வகையான காய்கறி விதைகள் பாரம்பரிய நெல் வகைகள், சிறுதானிய விதைகள், இயற்கை இடுபொருட்கள் பஞ்சகாவியா மூலிகை பூச்சிவிரட்டி ஆகியவை விற்பனைக்கு கிடைக்கும்.
 மேலும் மர விதைகள் பற்றிய கண்காட்சி நடைபெற இருக்கிறது.
  
விவசாயிகளின் மிகப்பெரிய சக்தி விதைகள்தான். `ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியே இருக்கு. அதைச் சார்ந்துதான் இந்தத் திருவிழா இங்கு நடக்க  இருக்கிறது. விதைகள் பகிர்வுக்காக, விதைகள் எனச் சொல்லப்படக்கூடிய அனைத்து வகையான விதைகளும் இங்கே வந்துள்ளன. காய்கறி, கீரை, நெல், தானியங்கள் எனப் பல வகையான விதைகள் இங்கு கிடைக்கும். 
விவசாயிகள் அவர்களிடம் உள்ள விதைகளை இங்கு காட்சிபடுத்திப்படவுள்ளன  என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81