திருச்சி அருகே உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி தீவிரம்

திருச்சி அருகே உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி தீவிரம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான மாகாளி குடியிலுள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

விக்ரமாதித்தனால் கொண்டுவரப்பட்ட சிலை உள்ள கோயில். இங்கு அம்பிகை அர்த்தநாரீஸ்வர கோலத்தில்  காட்சி தருகிறார். ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளை உள்ளன பொதுவாக அம்மனுக்கு 2,4,8 என்று விதத்தில் கைகள் இருக்குமானால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேதாளத்திற்கு களுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே மூலஸ்தான விமானத்தின் மீது ஏக கலசம் இருக்கும் அதுபோல இந்த அம்பாள் கோயிலிலும் ஏககலசம் உள்ளது சிவபெருமானே உமையாளை இடப்பாகத்தில் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவார்.
அம்பிகை அர்த்தநாரீஸ்வர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சி தருவதை திருச்சி மாவட்டம் மாகாளிக்குடி ஆனந்த சவுபாக்கிய சுந்தரி கோயிலில்  மட்டுமே காணப்படும்.

இந்த கோயிலில் உஜ்ஜைனி காளியம்மனும் காட்சி தருகிறாள் விக்ரமாதித்தன் இந்த சிலையை இக்கோயிலுக்கு தந்ததாக கூறப்படுகிறது.மிகவும் பழமை வாய்ந்த இக் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் சிதலமடைந்து இருந்தது இதனை சீரமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் மற்றும் அந்த கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியினை   மேற்கொள்ள கோவில் நிதி ரூபாய் 40.5லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குளத்தில் சீரமைக்கும் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது கொரானா  காரணமாகவும் அந்த சமயத்தில் பெய்த மழையினால் தெப்பக்குளத்தில் நீர் தேங்கியதால் சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு இருந்தது இந்நிலையில் தற்போது குறைந்த அளவு தண்ணீர் உள்ளதால் மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றப்பட்டு தெப்பக் குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn