திருச்சியில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்திற்கான போட்டிகள் ஆட்சியர் அறிவிப்பு 

திருச்சியில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்திற்கான போட்டிகள் ஆட்சியர் அறிவிப்பு 

கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுத்திடும் நோக்கில் மாநில அளவில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 01.08.2021 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு விழிப்புணர்வுப் பிரச்சாரம் துவக்கி வைத்தார்.

இதனையொட்டி மாவட்ட அளவில்
விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற இருக்கின்றது. இப்போட்டிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, குறும்படபோட்டி, மீம் (MEME) உருவாக்கும் போட்டி, தொடர் முழக்க சொற்றொடர் போட்டி (Covid Awareness Slogan) கொரானா விழிப்புணர்வு ஒட்டிகள் உருவாக்கம். (Covid Awareness Poster Designing) ஆகியவை நடைபெறவுள்ளது.

போட்டியில் வெற்றி பெறும் படைப்புகளுக்கு சிறப்புப் பரிசுகளும், அங்கீகாரமும் வழங்கப்படும்.

போட்டி விதிமுறைகள்:

படைப்புகள் தமிழில் இருக்க வேண்டும். 
வயது வரம்பு இல்லை. குறும்படம் 5 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பிட்ட நபர், மதம் குறித்த கருத்துக்கள் நிராகரிக்கப்படும். கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.

படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 06.08.2021

படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : trichycovidcontrol@gmail.com

தொலைபேசி எண் : (whatsapp) - 99526 11108

முகநூல்பக்கம் : https://facebook.com/trichycovidcontrol என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn