திருச்சியில் பத்தாயிரம் கிலோ தடை செய்யப்பட்ட மற்றும் கலப்பட உணவு பொருட்கள் அழிப்பு

திருச்சியில் பத்தாயிரம் கிலோ தடை செய்யப்பட்ட மற்றும் கலப்பட உணவு பொருட்கள் அழிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை மற்றும் பான்மசாலா போன்ற பொருட்கள் 6000 கிலோ (6 டன்) மற்றும் உணவு பாதுகாப்பு துறையினால் கைப்பற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்திற்கு முரணான உணவு பொருட்கள் சுமார் 4000 கிலோ (4 டன்) ஆகமொத்தம் 10000 கிலோ பொருட்களை அரியமங்கலம் உரக்கிடங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நிஷாந்தி, பாலக்கரை காவல் நிலையம், தட்ஷணாமூர்த்தி, BHEL காவல் நிலையம், ஜேம்ஸ் செல்வராஜ், திருவரம்பூர் காவல் நிலையம், லூர்து செல்வராஜ், திருச்சி Rly காவல் நிலையம், ராஜேந்திரன், சோமரசன்பேட்டை காவல் நிலையம், மற்றும் சசிகுமார் GH காவல் நிலையம் ஆகியோர்கள் உடனிருந்து மேற்கண்ட காவல் நிலையங்களால் கைப்பற்றிய தடைசெய்யப்பட்ட அனைத்து பொருட்களும் அழிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜ்  முன்னிலை வகித்தார்.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, வசந்தன், ஸ்டாலின்பிரபு, பொன்ராஜ் மற்றும் சையத் இப்ராஹீம், வடிவேல் மற்றும் மகாதேவன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.மேலும் கலப்பட உணவு சம்பந்தப்பட்ட உணவு புகார்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

உணவு கலப்பட புகாருக்கு 99 44 95 95 95, 95 85 95 95 95 மாநில புகார் எண் 94 44 04 23 22

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO