அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்பு திருச்சியில் (13.11.2022) அன்று நுழைவுத் தேர்வு

அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்பு திருச்சியில் (13.11.2022) அன்று நுழைவுத் தேர்வு

இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உட்பட

15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் என 16 மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு வருகின்ற (13.11.2022) அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், திண்டுக்கல் சாலையில் உள்ள தேசியக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 

அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் கிளார்க் மற்றும் ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல், அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டிரேட்ஸ்மென் போன்ற பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. விருப்பமும், தகுதியும் உடைய இளைஞர்கள் அன்று காலை 4.00 மணிக்கு முன்னதாக தகவல் தெரிவித்திடுமாறும், நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறும் திருச்சிராப்பள்ளி ராணுவ ஆட்சேர்ப்பு மைய அலுவலர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO