NIT மாணவி பாலியல் வன்கொடுமை - கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

NIT மாணவி பாலியல் வன்கொடுமை -  கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி NIT மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கதிரேசன் மீது உரிய நடவடிக்கையை எடுத்திட வேண்டும் பணியில் மெத்தனம் காட்டியதோடு ஆடை தான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறிய விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளே பெண்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் குற்றங்களை தடுத்திட கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அனைத்திந்தி இளைஞர் பெருமன்றம் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

திருச்சி என்.ஐ.டி கல்லூரி நுழைவாயில் முன்பு அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் திருச்சி என்.ஐ.டி யில் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தின் போது திருச்சி என் ஐ டி யில் உள்ள விடுதியில் மாணவி ஒருவருக்கு பாலியல் சீண்டல் நடந்தது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். தொடர்ந்து மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். என் ஐ டி வளாகத்தில் உள்ளே வரக்கூடிய நபர்களை விசாரித்து பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுப்ப வேண்டும்.

என்ஐடி கல்லூரி வளாகம் முழுவதும் சிசிடிவி அமைக்க வேண்டும். கல்லூரி கலாச்சார விழா என்ற பெயரில் நடிகர்கள், நடிகைகள் அழைத்து வந்து நடக்கக்கூடிய போதை பொருள் புழக்கத்தை தடை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி வழங்க வேண்டும். மேலும் மாணவர்கள் நலனின் அக்கறை கொள்ளாத அலட்சியமாக செயல்பட்ட இயக்குனர் அகிலா பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினரை காவல் வாகனத்தில் அழைத்து சென்று பின்னர் விடுவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision