திருச்சியில் பழமை வாய்ந்த ஜங்ஷன் மேம்பாலம் மூடப்பட்டது

திருச்சியில் பழமை வாய்ந்த ஜங்ஷன் மேம்பாலம் மூடப்பட்டது

திருச்சி ஜங்ஷன் பழைய பாலத்திற்கு பதிலாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.100 கோடியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால், இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.81.4 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜங்ஷன் பழைய மேம்பாலத்தின் வழியாக இருவழிப் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்தது. மாநகரின் பழமை வாய்ந்த ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் நேற்று இரவு மூடப்பட்டது.

இந்தப் பழைய பாலத்தை இடித்து புது மேம்பாலம் கட்டுவதற்கு திட்ட முடிவு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஜங்ஷன் பழைய மேம்பாலம் இடிக்கப்பட்டு புது மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட உள்ளது. மேலும் இந்த பழைய பாலம் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision