திருச்சி காந்தி சந்தை சுற்றியுள்ள தரை கடைகள் காவல்துறையினரால் அகற்றப்பட்டது

திருச்சி காந்தி சந்தை சுற்றியுள்ள தரை கடைகள் காவல்துறையினரால் அகற்றப்பட்டது

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றது. கோவிட் தொற்று இரண்டாவது அலை காரணமாக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் வியாபாரிகளை பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு செல்ல வலியுறுத்தினர்.

இதுவரை நாங்கள் அங்கு செல்ல மாட்டோம் இங்கேயே தான் வியாபாரம் செய்வோம் என தொடர்ந்து காந்தி மார்க்கெட் உள்ளேயே வியாபாரிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழக அரசு ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என தெரிவித்ததையடுத்து திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் காலை முதலே அத்தியாவசிய தேவை இல்லாமல் வரக்கூடிய அவர்களிடம் விசாரித்து அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

இரண்டு நாட்களில் காந்தி சந்தை இங்கு இருந்து பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தபடுகிறது. தனிமனித இடைவெளியில்லாமல் முகவசம் அணியாமல் உள்ளே அதிகமானோர் இருப்பதை காணமுடிகிறது. 

இன்று காலை காந்தி சந்தை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் தரை கடைகளை   அனைத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி அவர்கள் அனைவரையும் இங்கிருந்து செல்ல வலியுறுத்தினர்.

காவல்துறையினர் காந்தி சந்தைக்கு வெளியே நாளை முதல் ஒருவரும் தடை கடை போடக்கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்து ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து தகவல் கொடுத்து  வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd